இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். வங்கி கணக்குகளை விட தபால் நிலையங்களில் கூடுதலான வட்டி மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதால் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் அஞ்சலக திட்டத்தின் கீழ் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். குழந்தை பிறந்ததுமே குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறிய சிறிய தொகையாக இதில் முதலீடு செய்யலாம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகத் திட்டத்தில் ஏராளமான திட்டங்கள் இருந்தாலும் ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் கீழ் பல நலன்கள் வழங்கப்படுகிறது.

அதாவது பத்து வயது பூர்த்தி அடைந்த ஆண் குழந்தையின் பெயரில் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். பத்து வயதுக்கு முன்பாக கணக்கு தொடங்க விரும்பினால் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். அதே சமயம் ஆண்டு வட்டியாக பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஆண் குழந்தையின் படிப்பு செலவுக்காக கணக்கு தொடங்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து முதலீடு செய்த தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.