
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் அதிகளவில் பயன்படுத்தும் நிலையில் இளம் தலைமுறையினர் இணையத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இப்படி அதிக நேரம் செல்போனில் நேரத்தை செலவிடுவதால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு இளம் தலைமுறையினர் அதிக அளவில் செல்போன் பயன்படுத்துவதன் மூலம் சில நேரங்களில் தவறான பாதைக்கு கூட செல்ல வழி வகுக்கிறது.
சில நாடுகளில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இணையதளத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது பெற்றோர் அனுமதி பெற வேண்டும் என்று அரசு கூறுகிறது. சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்தது. அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்க பெற்றோரின் அனுமதி தேவை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதன்படி இந்த புதிய அறிவிப்பு மத்திய அரசு வெளியிட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளில் வெளியிடப்பட்டுள்ளது.