
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலை மேலான அரசு நடந்துவரும் நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து டோர் ஸ்டெப்ஸ் டெலிவரி ஆப் திட்டத்தின் கூடுதல் சேவைகளை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதன் மூலம் பயனர்கள் வீட்டில் இருந்தபடியே அரசின் பல்வேறு துறைகளில் இருந்தும் வருமானம், ஜாதி, இருப்பிடச் சான்றிதழ்கள், சாக்கடை, குடிநீர் மற்றும் மின் இணைப்புகள், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பேருந்து பயண அட்டை என நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகளை பெற முடியும்.
இந்த திட்டத்திற்காக அரசு இரண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இந்த திட்டத்தில் மேலும் 58 ஆவணங்களை பெரும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் மற்றும் தொழிலாளர் துறையின் பல்வேறு சான்றிதழ்கள், கருணைத்தொகை செலுத்துதல், ஓட்டுநர் உரிமங்களில் பெயர் புதுப்பித்தல் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான அனுமதிகள் புதுப்பித்தல் போன்ற சேவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இறுதிப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இது தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.