உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி பயனர்களுக்கு தற்போது HD வீடியோக்களை பகிர்வது மற்றும் வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேர் செய்வது, ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு சாட் ஹிஸ்டரி அனுப்பும் வசதி, புதுவகையான எமோஜிக்கள் மற்றும் அனிமேஷன் அவதார் என தொடர்ந்து பல புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஏற்கனவே பயனர்களுக்கு அனுப்பிய செய்தியை ஒரு சில நிமிடங்களில் எடிட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்தையும் தாண்டி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்களுக்கு அனுப்பும் போது கேப்ஷன் தவறாக அனுப்பி விட்டால் அதனை எடிட் செய்து கொள்ளும் வசதியை whatsapp தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் iOS பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.