இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் வருகையால் மக்கள் குறைந்த அளவே கையில் பணத்தை எடுத்துச் செல்கின்றனர். தற்போது பெரும்பாலான மக்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். வங்கி கணக்கில் உள்ள தொகையிலிருந்து யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

தற்போது வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு சேவை வழங்கப்படுகிறது. அதாவது இனி கூகுளின் கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி upi சேவை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயனரிடம் செயலியில் உள்ள கூகுள் பே கணக்கு மற்றும் குறிப்பிட்ட வங்கியின் rupay கிரெடிட் கார்டு இருக்க வேண்டும். மேலும் கிரேடிட் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் என்னும் செயலில் இருக்க வேண்டும் எனவும் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் Google Pay செயலியை திறந்து செட்டிங்க்ஸை மாற்ற ப்ரொபைல் ஐகானைக் கிளிக் செய்து  RuPay கிரெடிட் கார்டைச் சேர்ப்பதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு வங்கியைத் தேர்ந்தெடுத்து கிரெடிட் கார்டு விவரங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
செயல்முறை முடிந்ததும், Google Pay மூலம் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.