இந்தியாவில் கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இதில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறுகின்றனர். சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயில்களில் qr கோடு மூலமாக டிக்கெட் பெரும் முறை பயணிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து தற்போது பேருந்துகளிலும் qr கோடு மூலமாக டிக்கெட் பெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதாவது இந்தியாவிலேயே முதல்முறையாக பூனே பேருந்து போக்குவரத்து அமைப்பு கியூ ஆர் கோட் டிக்கெட் முறையை தொடங்கியுள்ளது. பயணிகள் பேருந்து டிக்கெட்டுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்படுவதால் இதனை தவிர்ப்பதற்காக மொபைல் போன் செயலியை பயன்படுத்தி எளிதில் டிக்கெட்டை முன்பே எடுத்துக் கொள்ள முடியும். மேலும் பேருந்தில் ஏறும்போது கண்டக்டர் அதனை ஸ்கேன் செய்து உங்கள் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.