பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த  7ஆம் தேதி திடீரென இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்த இஸ்ரேல் அரசு வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18,000 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு களமிறங்கியது. அதற்காக ஆப்ரேஷன் அஜய் என்ற மீட்பு பணி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இதுவரை 1180 இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று 286 இந்தியர்களும் 18 நேபாள குடிமக்களும் இந்தியாவின் ஐந்தாவது விமான மூலமாக டெல்லி வந்தடைந்தனர். இந்தியர்கள் மட்டுமல்லாது அண்டை நாட்டிலிருந்து இஸ்ரேலில் சிக்கித் தவிப்பவர்களையும் மத்திய அரசு அழைத்து வந்துள்ளது.