தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக மத்திய அரசு பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த தானியங்கி ஸ்டிக்கர் மூலமாக ஆட்டோமேட்டிக்காக வங்கி கணக்கிலிருந்து ஸ்கேனிங் மூலமாக சுங்க சாவடிகளில் பணம் வசூலிக்கப்படும்.

இது வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நல்ல வரவேற்பையும் பெற்றது. நீண்ட நேரம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதில் தற்போது புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

அதாவது தேசிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறையை எளிதாக்குவதற்காக பாஸ்டேக் விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் 3000 ரூபாய் கட்டணம் செலுத்தி அனைத்து விதமான தேசிய நெடுஞ்சாலைகள், மாநில விரைவுச் சாலைகள் மற்றும் விரைவு சாலைகளை வருடம் முழுவதும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்ற முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்த வருடாந்திர பாஸ் முறையில் இந்தியா முழுவதும் பயணம் செய்ய மீண்டும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் வராது. ஒருமுறை மட்டும் மொத்தமாக 3000 ரூபாய் செலுத்தினால் வருடம் தோறும் வாகன ஓட்டிகளுக்கு சுலபமாக இருக்கும்.

குறிப்பாக 100 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் வரை வசூலிக்கப்படும் நிலையில் அடிக்கடி பயணம் செய்யாதவர்களுக்கு அதாவது ஏதாவது ஒரு சூழலில் மட்டும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்.

மேலும் அதே சமயத்தில் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி 15 வருடங்களுக்கு கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தப்படும் வாழ்நாள் பாஸ்டேக் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.