ரயில் பயணங்களின் போது நாம் விரும்பி உண்ணும் உணவுகள் எவ்வளவு பாதுகாப்பானவை என்ற பெரும் கேள்வியை இந்த வைரல் வீடியோ எழுப்பியுள்ளது. ரயில்களில் உணவு தயாரிக்கப்படும் விதம் மற்றும் கையாளப்படும் முறை மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் “இனிமேல் ரயிலில் எதையும் வாங்கி சாப்பிடவே கூடாது” எனப் பலரும் தங்களது ஆதங்கத்தை கமெண்டுகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். பயணிகளின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய செயல்கள், ரயில்வே நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளன.
रेलवे का चना मटर खा लो फ्रेंड्स 🌝 pic.twitter.com/cq6KCxgvzY
— Baba MaChuvera 💫 Parody of Parody (@indian_armada) January 12, 2026
“>
இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, ரயில்வே கேண்டீன்களில் தரக்கட்டுப்பாட்டு சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பல பயணிகள் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருவதுடன், தரமற்ற உணவை வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இதனால் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவை உறுதி செய்ய வேண்டியது இந்திய ரயில்வேயின் கடமை என்றாலும், தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டும் இது போன்ற வீடியோக்கள், மக்கள் தங்கள் பயணத்தின் போது வீட்டிலிருந்தே உணவைக் கொண்டு செல்வதே பாதுகாப்பானது என்ற முடிவுக்குத் தள்ளியுள்ளது.
