
இந்தியாவில் சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய மாநில பள்ளிகளிலும் வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு பொது தேர்வுகளையும் எழுதும் மாணவர்கள் அதில் எந்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதனை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை தேர்வு எழுதுவது கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை வாரிய தேர்வுகள் என்ற கருத்து மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது எனவும் இது கட்டாயம் இல்லை என்றும் இரண்டு தேர்வையும் எழுத விரும்பினால் மட்டுமே தேர்வர்கள் எழுதலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இந்த கல்விக் கொள்கை அமல்படுத்தப்படாத நிலையில் இங்குள்ள மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.