தமிழகத்தில் பதிவு துறையில் 1975 ஆம் ஆண்டு முதல்தற்போது வரையிலான காலத்திற்கு உரிய பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில் வில்லங்கச் சான்றுகளை ஆன்லைனில் மக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஆன்லைனில் வில்லங்கச் சான்று பெரும் வசதி 1950 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆவணங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதனை செயல்படுத்த 1950 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு உரிய வில்லங்கச் சான்றுகளை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்காக 36.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இந்த பணி முடிந்ததும் 1950 ஆம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்கச் சான்றுகளை பொதுமக்கள் ஆன்லைனில் பார்வையிடுவதற்கும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.