நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் ஆட்சிக்கு வந்தால் ? உலக தரத்திற்கு ஆகச்சிறந்த கல்வியை ஏழை – பணக்காரன், உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இன்றி,  கிராமம் –  நகரம் என்ற பாகுபாடு இன்றி… எல்லோருக்கும் ஆகச் சிறந்த கல்வியை கொடுப்பேன்.

அறிவை வளர்க்கும் கல்வி என்பதும் மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை, அதை கொடுக்காமல் இருப்பது மாபெரும் கொடுமை,  அதை மாற்றுவேன். அடுத்து உயிர் காக்கும் மருத்துவம்….  ஒரு ரூபா மருத்துவத்தில் இருந்து ஒரு கோடி மருத்துவமனாலும் என் உறவினர்களுக்கு….

என் நாட்டின் மக்களுக்கு இலவசமான மருத்துவம்,  தரமான மருத்துவம்….  நீ இங்க இருந்து குழந்தைக்கு முடியலன்னு,  கைக்கு ஊசி போட்டு..  கை எடுத்து விடுற மருத்துவம் கிடையாது… ஆகச்சிறந்த மருத்துவம். ஏன் ?

அமைச்சர் – முதலமைச்சர் – எம்.பி – எம்.எல்.ஏ எவனுக்கும் உடம்பு முடியலனாலும்,  அரசு மருத்துவமனையில் தான் படுக்கணும்,  சட்டம் போட்டுறுவேன் ..  அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பெருமக்கள் எல்லாருடைய பிள்ளைகளும் அரசு பள்ளி – கல்லூரியில தான் படுக்க வேண்டும். கல்வி தரம் உயர்ந்துவிடும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புல இன்டர்வியூ  வருவ. நாங்க நேர்காணல் எடுக்கும்போது,  அரசு பள்ளியில் படித்திருக்கிறாயா என்று பார்ப்போம். அரசு கல்லூரியில் படித்திருக்கிறாயா என்று பார்ப்போம்.  உனக்கு வேலையில முன்னுரிமை கொடுப்போம். உனக்கு கொடுத்துட்டு மிச்சம் இருந்தால் ? தனியார் பள்ளி – கல்லூரிகளில் படிச்சவனுக்கு கொடுப்போம். இல்லனா… கிளம்புபா என சொல்லிடுவோம். அப்புறம் பார்ப்பேன்…  பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் இருக்கன்னு  பார்ப்பேன், அதுக்கு வேலையில் முன்னுரிமை.

தினேஷ், விக்னேஷ், சுரேஷ், ரமேஷ், என்று பாம்பு மூச்சுவிட்ட மாதிரி  புஸ்சு புஸ்சுன்னு வச்சி இருந்தன்னு, வச்சுக்கோ….  வேலை வேணுமா ?  முதல்ல போய் 50 ரூபாய்… விலையை குறைச்சிடுவோம்…ஒரு பத்து ரூபாய் கட்டி பெயரை மாத்திட்டு வா… ஒரு நல்ல தமிழ் பெயர் வச்சிட்டு வா, போ…   தாய் மொழியில் பெயரை கூட தாங்காத ஒரு இனம் எப்படி வாழும் ? – என தெரிவித்தார்.