நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்ப்பதற்கு தற்காப்பு கலை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறிய வயது முதலே இதற்கு பழக்கப்படுத்தி விட்டால் மிகவும் நம்பிக்கையோடு பெண் குழந்தைகள் நடை போட பெரிதும் உதவிகரமாக இருக்கும். எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் தோறும் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.

இதனை பயிற்சியாளர் கட்டணம் மற்றும் மாணவிகளுக்கான சிற்றுண்டி செலவு போன்றவற்றிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 5000 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்று கணக்கில் 9.4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் நோக்கம் என்னவென்றால் மாணவிகள் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் திறன் பெற்று இருக்க வேண்டும். அதே சமயம் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது என்பதுதான்.