தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த நிலையில் தேர்வு மையம் குறித்து அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. பொதுவாக பொதுத்தேர்வின்போது போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்றால் அல்லது பள்ளியின் உள் கட்டமைப்பு சரியாக இல்லை என்றால் வேறு பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு சில நேரங்களில் தூரமாக இருக்கும் பள்ளிகளை தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவர்கள் தேர்வு நேரங்களில் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி நிர்வாகம் பக்கத்தில் இருக்கும் பள்ளியை தேர்வு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும் தேர்வு மையத்தை மாற்றுவதற்கான விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்கு அரசு கல்வி இயக்கமான [email protected]  என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது