27 வயது திருமணமான பெண் ஒருவர், தன்னுடைய 26 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் அளித்த மனுவில், ‘தனக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் மூன்றாவது குழந்தையை வளா்க்கும் சூழ்நிலை இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனை அடுத்து ‘கருவில் இருக்கும் குழந்தையைக் கொல்ல முடியாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியது. மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971-இன் கீழ் அதிகபட்சமாக 24 வார கருவை மட்டுமே கலைப்பதற்கு அனுமதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.