தமிழக மின்வாரியமான அனைத்து வீடுகளிலும் உள்ள மின் இணைப்புகளையும் ஸ்மார்ட் மீட்டராக மாற்றும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. தற்போது மின்வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் பயன்பாட்டு கணக்கை பயனர்களுக்கு உடனே தெரிவிக்கும் விதமாக செல்போன் ஆப்பை அறிந்தும் செய்துள்ளது. மின்வாரிய ஊழியர்கள் தங்களுடைய செல்போனோடு அரசு அளித்திருக்கும் கேபிளை சேர்த்து மீட்டருடன் இணைக்க வேண்டும்.

இதன் மூலமாக மின்கணக்கீடு செய்த பிறகு பயனர்களின் செல்போனுக்கு அவர்களுடைய கட்டண விவரம் உடனடியாக தெரிவிக்கப்படும். இந்த முயற்சியானது முன்னதாக தமிழகத்தில் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களிலும், தலா ஐந்து பிரிவு அலுவலகங்களிலும் சோதனை முறையில் கடந்த மாதம் செய்து பார்க்கப்பட்டது. இதில் விவரங்கள் துல்லியமாக பதிவு ஆகியது உறுதி செய்யப்பட்டது. இந்த மாத இறுதியில் இருந்து அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் செல்போன் செயலில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மின்வாரிய அறிவுறுத்தியுள்ளது.