மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழகத்தில் பிரத்தியேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் 17 பேர் கொண்ட குழுக்கள் கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகின்றனர். தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி மூணு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளை பிளே ஸ்கூலில் மட்டுமே சேர்க்கும் படியும் ஒன்றாம் வகுப்பில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு எழுத படிக்க கற்றுக்கொடுக்கும் பலியான அடிப்படை கல்வியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த புதிய கல்விக் கொள்கையின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களின் திறன் வளர்ப்பு மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கான புதிய கல்விக் கொள்கை தயார் செய்யப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய கல்விக் கொள்கை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க உள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமலாகும் என தெரிகிறது.