பல நிகழ்வுகளின் பொழுது உயரபறக்க விடப்படும் நம்முடைய தேசியக்கொடிகள் காற்று இல்லாமல் சுருண்டு விழுகிறது. இதனால் அவற்றின் கம்பீரம் சற்று குறையக்கூடும். இதனை கருத்தில் கொண்டு 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையை சேர்ந்த பிரபல நிறுவனமானது புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக 200 அடி கம்பம் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது.

இதில் உள்ள தேசிய கொடிய 24 மணி நேரமும் கம்பீரமாக பறப்பதற்கு ஏதுவாக கம்பத்தில் ஏர் கம்ப்ரசர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெற்றிகரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிறுவனம், இதை வியாபாரத்திற்காக உருவாக்கவில்லை எனவும், யார் கேட்டாலும் இத்திட்டத்தின் செயல்முறைகளை கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.