உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் குழந்தைகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை படிக்கும் வகையில் அவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த திட்டம்  மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர அதற்கு இணையான படிப்புகளில் சேரும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முழு கட்டணமும் அரசு ஏற்றுக்கொள்ளும்.

அது மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு இஎஸ்ஐ மற்றும் இலவச வேலைவாய்ப்பு ஆகிய நன்மைகளும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு இஎஸ்ஐ வசதியை பெற விதிக்கப்பட்ட வயது வரம்பு கட்டுப்பாடும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியை இழந்த தொழிலாளர்களுக்கும் மருத்துவ பாதுகாப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.