தமிழக அரசு கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற வசதிகளை பெறலாம் என அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு கட்டட முடிவு சான்று அவசியம் என்பதால் கட்டிடங்கள் கட்டும் போது மின் இணைப்பு வசதியை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்தது.

இதன் காரணமாக நகராட்சி நிர்வாக துறை அனைத்து வீடுகள், தொழிற்சாலை கட்டிடங்கள் போன்றவற்றுக்கு மின் இணைப்பு, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை போன்ற வசதிகளை பெறுவதற்கு கட்டட முடிவு சான்று கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், இனி கட்டட சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதியை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.