கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று(பிப்,.17) விசாரணைக்கு வந்தது. அப்போது பிற மாநில மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் தென்காசியில் தான் அதிக அளவு மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. கடந்த ஆண்டு தென்காசியில் மட்டும் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது. கோவை, குமரி, நீலகிரி, தேனியில் எந்த வழக்கும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.