சென்னையில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்றவேண்டும் என மின்சார வாரியமானது கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 15 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பர பலகைகள் இடம்பெறுவதால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை கடைபிடிக்காமல் விபத்து ஏதும் நிகழ்ந்தால் அப்பகுதியின் மின்வாரிய பொறியாளரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் மின்வாரியமானது திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அதோடு மின்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கேபிள் வயர்கள் அகற்றப்பட்டதா என்பதை மின்வாரிய அதிகாரிகள் பல்வேறு ஆய்வின் வாயிலாக உறுதிசெய்ய வேண்டும்.