வீடுகளின் மேற்கூரைகள் பொதுவாக அலை அலையாகவோ அல்லது முக்கோண வடிவில் மேலும் கீழுமாக அமைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்னவென்று பலர் யோசித்திருக்க மாட்டோம்.

ஏன் நேரான, தட்டையான ஓடுகளைப் பயன்படுத்துவதில்லை என்ற கேள்விக்கு, இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ எளிமையாகவும் தெளிவாகவும் பதில் அளிக்கிறது. இந்த வீடியோவில், ஒரு தட்டையான காகிதத்தை இரண்டு மேசைகளுக்கு இடையில் வைத்து, அதன் மேல் ஒரு பெட்டியை வைக்கின்றனர். ஆனால், எந்த கோணமும் இல்லாத அந்த காகிதம் பெட்டியின் எடையைத் தாங்க முடியாமல் கீழே விழுந்துவிடுகிறது.

இதன் மூலம், தட்டையான மேற்பரப்பு எடையைத் தாங்குவதற்கு பலவீனமாக இருப்பது தெளிவாகிறது. இந்தப் பரிசோதனை, மேற்கூரைகளின் வடிவமைப்பில் முக்கோண அமைப்பு ஏன் முக்கியமானது என்பதை விளக்க உதவுகிறது.

அடுத்து, அதே காகிதத்தை நான்காக மடித்து வலுப்படுத்தி, மீண்டும் மேசைகளுக்கு இடையில் வைத்து பெட்டியை வைக்கின்றனர், ஆனால் அது மீண்டும் தோல்வியடைகிறது. பின்னர், காகிதத்தை முன்னும் பின்னுமாக அடுத்தடுத்து மடித்து, முக்கோண வடிவில் அலை அலையாக மாற்றுகின்றனர். இந்த முறை, மேசைகளுக்கு இடையில் வைக்கப்பட்ட காகிதம், ஒரு பெட்டியை மட்டுமல்ல, இரண்டு பெட்டிகளின் எடையையும் தாங்குகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jahir Ali Khan (@sciencewithjahir)

“>

இந்த அலை அலை முக்கோண வடிவம், காகிதத்தின் வலிமையை பன்மடங்கு அதிகரிக்கிறது, ஏனெனில் முக்கோண அமைப்பு எடையை சமமாகப் பரவச் செய்து, அழுத்தத்தைத் தாங்க உதவுகிறது. இதே கோட்பாட்டைத்தான் மேற்கூரைகளின் வடிவமைப்பில் பயன்படுத்துகின்றனர். முக்கோண வடிவம், காற்று, மழை, பனி போன்றவற்றின் அழுத்தத்தைத் தாங்குவதற்கு உறுதியான அமைப்பை வழங்குவதோடு, எடையை சமமாக விநியோகிக்க உதவுகிறது.

இந்த வைரல் வீடியோ, எளிய காகிதப் பரிசோதனை மூலம் இந்த அறிவியல் உண்மையை நமக்கு புரியவைத்து, மேற்கூரைகளின் வடிவமைப்பு பின்னணியில் உள்ள வலிமையின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.