மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சென்னை ரயில்வே மண்டலத்தில் உள்ள 26 ரயில் நிலையங்கள் முழுமையான காணொளி கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட உள்ளது.

இதற்காக 528 CCTV கேமராக்கள் பொருத்தும் பணியை தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களின் சமூக முன்னேற்றம் & பாதுகாப்பை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியிலிருந்து இந்த திட்டத்திற்காக ரூ.9.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.