தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கும் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அகலவிலைப்படி உயர்வை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாத அகல விலை படித்தொகை தற்போது நடைமுறையில் உள்ள பணம் இல்லாத பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும்.

அகல விடைப்படி உயர்வுக்கான பட்டியல்கள் கருவூல அலுவலர்கள் அல்லது சம்பள கணக்கு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகல விலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு தனி நபருக்கும் அளிக்கப்பட வேண்டிய கணக்கிடுவது ஓய்வூதியம் அளிக்கும் அலுவலர்களின் பொறுப்பாகும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.