தமிழ்நாட்டில் முதல்முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை  முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதேபோன்று திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாணவி நந்தினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்  மாணவி நந்தினி, கோவை பிஎஸ்ஜி கலை& அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். B.com (புரபசனல் அக்கவுன்டிங்) பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துள்ள நந்தினியின் கல்விச் செலவு, விடுதி கட்டணங்களை முழுமையாக கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. மாணவியின் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் கூறியிருந்த நிலையில், கல்லூரி நிர்வாகமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.