தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய செயலியை சேலம் மாநகர காவல் துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு என பெயரிடப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை அவர்களின் முகவர்களுக்கும் காவல்துறைக்கும் தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலில் புலம் பெயர் தொழிலாளர்கள் எந்த மாநிலத்தில் எந்த முகவரியில் வசித்து வந்தார்கள், தற்போது எங்கு இருந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதாவது ஆபத்து ஏற்படும் சமயத்தில் தொழிலாளர்கள் இந்த செயலில் நான் பாதுகாப்பாக இல்லை என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் தங்கள் இருப்பிடத்தில் இருந்து காவல்துறை உதவியை நாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.