தமிழகத்தில் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் படிப்புகளை நீக்கவும் அதற்கு பதிலாக புதிய பட்டப்படிப்புகளை சேர்க்கவும் உயர் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு சில அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத மற்றும் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள படிப்புகளை மட்டும் நீக்கம் செய்துவிட்டு அந்த படிப்புகளுக்கு பதில் தேவையின் அடிப்படையில் படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள புதிய படிப்புகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் 12 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் படிப்புகளை நீக்கவும் அதற்கு பதிலாக கணினி அறிவியல், தமிழ், உயர் தொழில்நுட்பவியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய படிப்புகளை புதிதாக தொடங்கவும் பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.