இந்தியாவில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தியேட்டரில் படம் பார்ப்பதற்கு சப்ஸ்கிரைப் பட்டன் வசதி கொண்டு வரப்பட உள்ளது. இந்த வசதி வெளிநாடுகளில் இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் இதுதான் முதல் முறை. இந்த புதிய திட்டத்தை பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த சப்ஸ்கிரைப் செய்து திட்டத்திற்கு பி.வி.ஆர் ஐநாக்ஸ் பாஸ்வேர்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு மாதம் முழுவதும் ஐநாக்ஸ் தியேட்டர்களில் படம் பார்க்கலாம். அதற்கு ஒருமுறை மட்டுமே பணம் செலுத்தினால் போதும். இதற்கான சந்தா விலை ஒரு மாதத்திற்கு 709 ரூபாய் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் இணையும் போது முதல் மூன்று மாதங்களுக்கு சந்தாதாரராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டம் முதல் கட்டமாக சில நகரங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.