இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி வெள்ளியை சேர்ந்த பெண் வக்கீலுக்கு ஒரே நம்பரிலிருந்து மூன்று மிஸ்டு கால்கள் வந்துள்ளது.

அந்த எண்ணுக்கு திரும்ப அழைத்தபோது கொரியர் டெலிவரி என கூறியதை தொடர்ந்து வீட்டின் முகவரியை வக்கீல் கூறியுள்ளார். அதன் பிறகு அவரது வங்கியில் இருந்து 50 லட்சம் ரூபாய் எடுத்ததாக இரண்டு மெசேஜ் வந்துள்ளது. வங்கி விவரம், ஓடிபி அல்லது பாஸ்வேர்டு எதையும் பகிராமல் பணம் திருடப்பட்ட சம்பவம் சிம் மாற்று மோசடி என போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இது போன்ற மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.