இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றது. இதனால் லோன்களுக்கு வட்டி விகிதம் உயரும். அதனைப் போலவே சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களிலும் மக்களுக்கு அதிக வட்டியை வங்கிகள் தர வேண்டும். ஆனால் லோன்களுக்கு வட்டியை உயர்த்தும் வங்கிகள் அதன் பலன்களை மக்களுக்கு அளிப்பதில்லை. இந்த நிலையில் சேவிங்ஸ் கணக்கிற்கான வட்டியை உயர்த்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.