தமிழகத்தில் ரேஷன் கடைகளில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதனை பல ரேஷன் கடைகளில் பயன்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூகுள் பே மாதிரியான யுபிஐ சேவை நிறுவனங்கள் கூட்டுறவு துறையிடம் இருந்து கமிஷன் வசூலிப்பதால் அரசுக்கு கூடுதல் நஷ்டம் ஏற்படுவதாக தெரிகிறது. அதனால் யுபிஐ மூலம் பணம் பெற வேண்டாம் என்று ரேஷன் கடைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.