கூகுள் பே பயன்படுத்துவதற்கு இனி உங்களுக்கு பாஸ்வேர்டு வேண்டாம். வங்கியின் டெபிட் கார்டு கூட இல்லாமல் யுபிஐ சார் ஒன்றை மட்டும் கொண்டு வாடிக்கையாளர்கள் கணக்கை பயன்படுத்தலாம். இதற்கு முன்பு உங்களின் வங்கி கணக்கில் யு பி ஐ பயன்படுத்துவதற்கு டெபிட் கார்டு கட்டாயமாக இருக்கும். தற்போது புதிய மாற்றமாக உங்களின் ஆதார் கார்டு கொண்டு யுபிஐ ஐடியை பயன்படுத்தலாம். அதற்கு வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து இருந்தால் போதும்.

ஆதாரை பயன்படுத்தி Google Pay-ல் UPI ஐடியை பயன்படுத்துவது எப்படி?

இதற்கு முதலில் கூகுள் பே ஆப்பைபதிவிறக்கம் செய்து அதில் வங்கி கணக்கு மற்றும் ஆதாரப்பூர் வழங்கிய மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். கூடவே மின்னஞ்சல் முகவரியும் சேர்க்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள கூகுள் கணக்கை பயன்படுத்தி பதிவு செய்த பின்னர் அல்லது உள் நுழைந்த பிறகு மேல் வலது பக்கத்தில் உள்ள உங்களின் சுயவிவர படத்தை கிளிக் செய்து கட்டண முறைகளை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் வங்கியை தேர்ந்தெடுத்த யு பி ஐ ஐ டி களை நிர்வாகி என்பதை தேர்ந்தெடுத்து உங்களுக்கான சில யு பி ஐ ஐ டி களை தோன்றியதும் நீங்கள் விரும்பும் யூ பி ஐ ஐ டி களை தேர்வு செய்து கொள்ளலாம். பதிவு செயல்பாட்டின் போது நீங்கள் ஒரு ஐடியை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

அதன் பிறகு தேர்ந்தெடுத்த யு பி ஐ டி க்கு அடுத்துள்ள +குறியீட்டை கிளிக் செய்து உங்களின் வங்கி கணக்குடன் ஐடியை அங்கீகரிக்க உங்களின் வங்கி கணக்கை சரிபார்க்கவும். அதில் தோன்றும் ஆதாரை தேர்வு செய்து ஆதார் இன் முதல் ஆறு இலக்கங்களை உள்ளிடவும். மீதமுள்ள எண்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தினால் தானாகவே பெறப்படும்.

ஆதார் எண்ணெய் உள்ளிட்ட பிறகு அடுத்த திரையில் நீங்கள் உள்ளிட வேண்டிய ஓடிபி பெற்றவுடன் அதனை உள்ளிட்டு உங்கள் கணக்கிற்கு நான்கு அல்லது ஆறு இலக்க யுபிஐ பின்னை அமைத்து அடுத்த திரையில் மீண்டும் பின்னை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும். இப்போது கூகுள் பே கணக்கு தொடங்கப்பட்டு விடும்.