தமிழகத்தின் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு மின்னகம் என்ற சேவையை முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது .இதன் மூலமாக பொதுமக்கள் மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு போன்ற பல புகார்களை தெரிவிக்கலாம். இந்தசேவையானது  கடந்த மூன்று வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்கம்பங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்கள் போன்றவைகளுக்கான அடையாளத்தை சொல்வதில் சில சிக்கல்கள் நிலவி வருகிறது .இதை களைவதற்காக ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அடையாள எண் வழங்க திட்டமிட்டுள்ளது.

இதற்கான முன்னெடுப்பை மின் பகிர்மான கழகம் கையில் எடுத்துள்ளது. அதாவது ஆதார் எப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வெவ்வேறாக இருக்கிறதோ அதேபோன்று நடைமுறையை கொண்டு வர இருக்கிறது. அனைத்து மின் மீட்டர்கள், மின்கம்பங்கள் கண்டுபிடிப்பதற்கு பிரத்தியோகமான தனி எண்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக மின்னகத்தை தொடர்பு கொள்பவர்கள் எளிதில் தகவல் தெரிவித்து விடலாம். மின்வாரிய ஊழியர்களும் விரைவாக வந்து பிரச்சனையை சரி செய்து விடுவார்கள் . அதன்படி அந்த எண்ணெய் பதிவு செய்தாலே போதும் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை காண்பித்து விடும்.