தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்யும் பொழுது இனி கட்டடம் மற்றும் அடி நிலம் சேர்த்து ஒரே ஆவணமாக பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வீடு வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முத்திரை தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த ஒரு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

மொத்த கட்டட பரப்பளவை பொறுத்து கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் விற்பனை ஆவணம் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழிமுறையை தமிழகத்திலும் பின்பற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் வரை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 7 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இது 4% குறைக்கப்படுகிறது. 50 லட்சம் முதல் மூன்று கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 7 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் வங்கியில் கடன் பெற்று புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.