நடபாண்டு முதல் ஆண்டுக்கு மூன்று முறை சிஏ தேர்வுகளை நடத்த இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி, மே அல்லது ஜூன் மற்றும் செப்டம்பரில் தேர்வுகள் நடைபெற உள்ளது. முன்னர் ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி, மே/ ஜூன்) மட்டுமே தேர்வு நடைபெற்றது. முன்பு மாணவர்கள் தேர்வுக்கு ஆறு மாதங்கள் வரை காத்திருந்த நிலையில் தற்போது இரு தேர்வுகளுக்கு இடையேயான கால இடைவெளி நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.