இடைவிடாத மழையால் சாலைகளில் நின்ற வெள்ளம், குருகிராமில் போக்குவரத்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய ஸ்கூட்டரைத் தலையில் தூக்கிச் சென்ற இரண்டு ஆண்கள் தொடர்பான வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, நகரின் முக்கிய சாலைகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்ததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி, 7 கிலோமீட்டருக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரே ஸ்கூட்டரில் வந்த இரு ஆண்கள், நெரிசலில் சிக்காமல் செல்லும் முயற்சியில், ஸ்கூட்டரை தலையில் தூக்கி, வாகனங்களுக்கு நடுவே சிக்கலான பாதைகளில் சென்றதைக் காணலாம். இந்த 12 வினாடிகள் கொண்ட வீடியோ, “gurgaon_locals” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இருவரும், ஸ்கூட்டரை கவனமாக மேலே தூக்கிச் சென்றபோது, அருகில் இருந்தவர்கள் திகைத்து பார்த்தனர். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பரவலான வேடிக்கை மற்றும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், ஒருவரின் உணர்ச்சி பொங்கும் கமெண்ட், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் “தினமும் ஸ்கூட்டி என்னை வீட்டுக்கே அழைத்து செல்கிறது… ஆனா இன்று நான்தான் ஸ்கூட்டியை வீட்டுக்கு அழைத்து சென்று விடுவேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம், குருகிராமில் சாலை வடிவமைப்பு மற்றும் நீர் வடிகால் வசதிகளின் குறைபாட்டை மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பொதுமக்கள், நகராட்சி நிர்வாகம் மழைநீர் செலுத்தும் அமைப்புகளை மேம்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
