சமூக வலைதளங்களின் தாக்கம் இன்றைய மாணவர்களின் கல்வி முறையிலும் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதற்கு ஒரு சமீபத்திய நிகழ்வு சாட்சியாக அமைந்துள்ளது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, மாணவர்கள் வழக்கமான மொழிநடைக்கு மாறாக, வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் ‘அப்ரிவேஷன்’அல்லது சுருக்க எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அந்த மாணவர் தனது விடைத்தாளில் என்பதற்குப் பதிலாக என்றும், என்பதற்குப் பதிலாக என்றும் எழுதியிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கல்வித் தாள்களில் முறையான இலக்கணம் மற்றும் தெளிவான விளக்கங்களை எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு, இந்த ‘சாட்டிங்’ மொழி நடை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sudipto Roy (@sudipto_2.0_)

“>

இதனால் மாணவர்கள் கல்விக்கும் சமூக ஊடகச் செயல்பாடுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளத் தவறியதே இதுபோன்ற விசித்திரமான பதில்களுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வைரல் வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், வருங்காலத்தில் தேர்வு அறைகளிலும் போன்ற வார்த்தைகள் இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.