சென்னை கிளம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, தனியார் பேருந்துகள் சென்னை நகரில் சூரப்பட்டு, போரூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்று சிறக்க அனுமதிக்கப்படும் எனவும் பெருங்களத்தூரில் பயணிகளை இரக்க மட்டும் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்று இரக்க அனுமதித்தால் கிளாம்பாக்கம் செல்லும் முன்பே பேருந்துகள் நிரம்பி விடும் எனவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கம் வீணாகிவிடும் என நீதிபதி தெரிவித்தார். எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும் மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டு அதற்கான வரைபடத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.