ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கு பிப்ரவரி 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகருக்கு பிப்ரவரி 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ரூா்கேலா, சம்பல்பூா், பாா்வதிபுரம், ராஜமுந்திரி, பீமாவரம், விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லூா், கூடூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா் ஆகிய வழித்தடத்தில் இயக்கப்படும் எனவும் இதற்கான பயண சீட்டுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் போலவே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வாரம் தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் சிறப்பு முறையில் தொடர்ந்து பிப்ரவரி 29ஆம் தேதி வரை இயக்கப்படும் எனவும் மறுமார்க்கமாக மார்ச் மூன்றாம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.