பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இந்நிலையில் அதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருக்கிறார்.

அதாவது “கோடைக் காலத்தில் மின் தட்டுப்பாட்டை சரிசெய்யும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு கோடையில் எந்த மின் தட்டுப்பாடும் ஏற்படாது” என்று செந்தில் பாலாஜி பேசியிருக்கிறார்.