நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவலா  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது என்றே சொல்லாம். ஏனெனில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், நெல்சன் எனக்கு ரொம்ப நாள் பழக்கம். முதல் படம் ஷூட் பண்ணி தள்ளிப் போயிருச்சு. அப்புறம் பழைய வேலைக்கே போனாரு. ‘கோலமாவு கோகிலா’ படத்துல ஹிட் கொடுத்தார். இப்போ, 4வது படமே தலைவர் படம். நெல்சன், இந்த முறை குறி தப்பாது. ஆகஸ்ட் 10ஆம் தேதி அலப்பற கெளப்புறோம்” என்றார். இந்த விழாவில் பேசிய இயக்குநர் நெல்சன், ரஜினி சார் படத்தை இயக்க விஜய் சார் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்’ என தெரிவித்தார்.