தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அவர்களுக்கு உரிய முறையில் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதை பெற விருப்பம் உடைய மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் இ சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.