
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.20 சதவீதம் வட்டியும், சீனியர் சிட்டிசனுக்கு 7.95 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
புதிய வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் – 45 நாட்கள் : 3.50%
46 நாட்கள் – 60 நாட்கள் : 4%
61 நாட்கள் – 3 மாதம் : 4.50%
3 மாதம் – 6 மாதம் : 4.75%
6 மாதம் – 9 மாதம் : 5.75%
9 மாதம் – 1 ஆண்டு : 6%
1 ஆண்டு – 1 ஆண்டு 24 நாட்கள் : 6.80%
1 ஆண்டு 25 நாட்கள் – 13 மாதம் : 7.10%
13 மாதம் – 2 ஆண்டுகள் : 7.15%
2 ஆண்டுகள் – 30 மாதம் : 7.20%
30 மாதம் – 10 ஆண்டுகள் : 7%