பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையுள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில்  மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் விஜய் சேதுபதியிடம் இந்தி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அவர் காரசாரமாக பதிலளித்துள்ளார்.

விஜய் சேதுபதியிடம் அந்த செய்தியாளர், தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டாம் என சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு, “இந்த கேள்வியே தவறாக உள்ளது. தமிழ்நாட்டில் யாரும் இந்தி படிக்க வேண்டாம் என கூறவில்லை. திணிக்க வேண்டாம் என தான் கூறுகிறார்கள்” என கூறியுள்ளார்.