இத்தாலி நாட்டில் உள்ள கலாப்ரியா என்ற கிராமம் கடலோர அழகுக்கும் மழை நிலப்பரப்புகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆனால் சில வருடங்களாக இந்த கிராமத்தில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு தீர்வு காண நினைத்த கலாப்ரியா நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இத்தாலியில் இருந்து இந்த கிராமத்தில் வசிக்க வருபவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கிராமத்தில் கைவிடப்பட்ட கடைகள் மற்றும் சிறு தொழில்களை நடத்த முன் வர வேண்டும். அதோடு 90 நாட்களுக்குள் அவர்கள் அந்த கிராமத்திற்கு குடியேற வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் பொருளாதாரம் சரிவடைந்து வருவதை சமாளிப்பதற்காக தான் இது போன்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.