
தமிழகம் முழுவதும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதியோர், ஆதரவற்றோர், கைம்பெண் உதவித்தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.1200ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ. 1500ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.