உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகரில் இஸ்லாமிய பெண்ணை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் தனது தாயார் பணி புரியும் இடத்தில் உள்ள மற்றொரு மதத்தை சேர்ந்த சக ஊழியர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது சில ஆண்கள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த கும்பலில் உள்ள ஒருவர் சிறுமியின் முகத்தை செல்போனில் பதிவு செய்வதற்காக சிறுமியின் புர்காவை இழுக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் சிறுமியின் புர்கா கிழிக்கப்பட்டு, அந்த சிறுமி சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர்  விசாரணை  நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமியை தாக்கிய 6 ஆறு பேர் சர்தாஜ், ஷாதாப், உமர், ஹர்ஷ், ஷொயைப், மற்றும் ஷமி ஆகியோர் என தெரியவந்தது.

இதனை அடுத்து காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து முட்டுக்கு கீழ் அடித்துள்ளதால் 6பேரும் நடக்க முடியாமல் வெளிவரும் வீடீயோக்களும் வெளியாகி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து பெண்கள் மீதான பாதுகாப்பு குறித்து அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.