சிக்கிம் மாநிலத்தில் உள்ள யஷ்ஷிங் மாவட்டத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் நிகழ்ச்சி நடைபெற்ற போது ஒரு மாணவி மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டார். அதாவது 13 வயது சிறுமி ஒருவர் மிகவும் உடல்நலம் சரியில்லாதது போன்று காணப்பட்டதால் உடனடியாக ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி பல மாதங்களாக தன்னை பலாத்காரம் செய்ததாக கூறிய நிலையில் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் விசாரித்த போது அந்த சிறுமி அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்றதும் அந்த வீட்டின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதற்கு அவரின் மனைவியும் உடந்தை. அதுமட்டுமின்றி அந்த நபர் அந்த பகுதியைச் சேர்ந்த இருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 8 பேர் அந்த சிறுமியை பல மாதங்களாக சீரழித்த நிலையில் இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் எட்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
