இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது. அந்த வகையில் இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலைத் தொட்ட திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய சினிமாவில் முதன்முறையாக அமீர்கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான தங்கல் திரைப்படம் தான் ஆயிரம் கோடி வசூலை தொட்டது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டது.

அதன்பிறகு கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படமும் ஆயிரம் கோடி வசூலை தாண்டியது. இதைத்தொடர்ந்து தற்போது ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரம் கோடி வசூலை ஒரு படம் கூட நெருங்காத நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை கண்டிப்பாக அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.